2025 ஜூலை 09, புதன்கிழமை

கூட்டு நினைவுகூறல் அரசாங்கத்தை தாக்குகின்றது: குமாரவடிவேல்

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நினைவுகூறல் என்பது அரசியல் சமுதாயத்தில் இருந்து வேறுபட முடியாது. கூட்டு நினைவு கூறல் நேரடியாக அரசாங்கத்தில் தாக்கம் செலுத்துவதால் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர் என்று யாழ். பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற நினைவு கூறலுக்கான உரிமை தொடர்பான கலந்துரையாடலில் பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தனி நினைவு கூறலுக்கு பிரச்சினை இல்லை என்றும், கூட்டு நினைவு கூறலுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நினைவு கூறலில், கூட்டு நினைவு தனிநபர் நினைவாக சுருக்கம் அடைவதற்கு சாத்தியம் இல்லை.
இன்று நாம் வாழும் மற்றும் அனுபவிக்கும் சூழலில் கூட்டு நினைவேந்தல்களை செய்ய முடியாத நிலையில் தான் உள்ளோம். நினைவு என்பது வெறும் கடந்த காலத்தை மட்டும் வெளிப்படுத்துவது இல்லை. நிகழ்காலத்தையும் வெளிப்படுத்துவது ஆகும்.

சர்வதேசமானது இது சரியான அரசு என்று பார்ப்பதற்காக, இது இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று காத்திரமான உள்ளக செயன்முறைமையை செயற்படுத்துகின்றது. உள்ளக செயன்முறை என்பது ஏமாற்றும் வேலையாகவே இறுதியில் முடியும்.

வடக்கில் இருந்து அன்று முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு சரித்திரமாக காணப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .