Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 31 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தின் கூட்டுவுப் பணியாளர்களுக்கு ஜூன் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் வாழ்க்கைச் செலவுப்படி 1,950 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பாகக் குறிப்பிடுகையில்;,
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் 2012ஆம் ஆண்டுச் சுற்று நிருபத்தின் பிரகாரம் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு இப்போது வரைக்கும் வாழ்க்கைச் செலவுப்படியாக மாதந்தோறும் 5,850 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டுறவுப் பணியாளர்கள் தங்களுக்கு வாழ்கைச் செலவுப்படி நீண்ட காலமாக அதிகரிக்கப்படாமல் இருப்பதாகத் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள்.
பணியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு, கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் எனது அங்கீகாரத்துடன் வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரிப்பதென்று தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், கிராமிய வங்கிகளில் இருந்து பெறப்படும் இலாபத்தைத் தவிர்த்து சுயமுயற்;சியால் இலாபம் ஈட்டுகின்ற சங்கங்கள் யாவும் பணியாளர்களுக்கான வாழ்க்கைச் செலவுப்படியாக 7,800 ரூபாய் ஜூன் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும். இந்த அதிகரிப்பானது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தாது எனவும் கூறினார்.
கூட்டுறவுப் பணியாளர்களுக்கு அண்மையில் 30 வீதம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு வடக்கு கூட்டுறவு அமைச்சால் மே 15 ஆம் திகதி முதல் 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago