2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புகைத்தல் எதிர்ப்பு பேரணி

Gavitha   / 2015 ஜூன் 04 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் பண்டத்தரிப்பு உயர்தரப் பாடசாலை ஆகியவற்றால் நடத்தப்பட்ட புகைத்தல் எதிர்ப்பு பேரணி,  பண்டத்தரிப்பில் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக புகைத்தலுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறும் இந்தப் பேரணி நடைபெற்றது.

வர்த்தகர்கள் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்து, புகைத்தல் ஒழிப்பதற்கு முன்வரவேண்டும் எனக்கோரப்பட்டது.

மாணவர்களுடன், இளவாலைப் பொலிஸார், இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .