2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விமானத்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு நினைவுத்தூபி

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் 1995ஆம் ஆண்டு புக்காரா விமானக் குண்டு தாக்குதலில் பலியாகிய 21 மாணவர்கள் நினைவாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (05) நாட்டப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இந்த அடிக்கல்லை நாட்டினார்.

விமானக் குண்டுத் தாக்குதலில் வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் பலியாகியிருந்தனர்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் ச.சகிர்தன், வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X