2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு சிகரெட் விற்ற வர்த்தகருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட் விற்பனை செய்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (10) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், சுங்கவரி செலுத்தாத வெளிநாட்டு சிகரெட்களை வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்தவரை செவ்வாய்க்கிழமை (09) கைது செய்தனர்.

அவரிடமிருந்து 19 வெளிநாட்டு சிகரெட்களை கைப்பற்றியதுடன், அவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தகர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .