Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 11 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தர்மபுரம் வீதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் தப்பித்துச் செல்ல முற்பட்ட பாரவூர்தியொன்றை புதன்கிழமை (10) மாலை கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தி சாரதியும், அதன் உதவியாளரும் வாகனத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தர்மபுரம் பகுதியில் வீதிப் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸார் பாரவூர்தியை மறித்து சோதனையிட முற்பட்டபோது, பாரவூர்தி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து, பாரவூர்தியைக் துரத்திச் சென்ற பொலிஸார் பரந்தன் - பூநகரி வீதியில் வைத்து பொலிஸார் பாரவூர்தியை மறித்தனர்.
பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். முதிரை மரங்களுடன் பாரவூர்தியை பொலிஸ்
நிலையத்துக்கு கொண்டு சென்ற பொலிஸார், வாகன உரிமையாளர் தொடர்பான விபரங்களை மோட்டார் திணைக்களத்தினூடாகப் பெற்றனர்.
தொடர்ந்து மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
8 minute ago
25 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
32 minute ago
37 minute ago