Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கிளிநொச்சி, இத்தாவில் சேரன்பற்றுப் பகுதியிலிருந்து இருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற, மணலுடன் கூடிய 10 வாகனங்களை புதன்கிழமை (10) இரவு கைப்பற்றியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு உழவு இயந்திரம், ஒரு பாரவூர்தி மற்றும் 8 டிப்பர் ரக வாகனங்களில் அனுமதிப்பதிரமின்றி சேரன்பற்றுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் ஏற்றிச் செல்லப்பட்டது.
பளைச் சந்தியில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தொடர்ச்சியாக வந்த இந்த வாகனங்களை மறித்துச் சோதனை செய்ததில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
மணலுடன் கூடிய வாகனங்கள் பளைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago