Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 12 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ற.றஜீவன்
யாழ்ப்பாணம், நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்றித் தருமாறு தவிசாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சிலையை தனியார் ஒருவர் தனது நிதியில் தனக்குச் சொந்தமான காணியின் முன்பக்கத்தில் அமைத்துள்ளார். அமைக்கப்பட்ட சிலை வியாழக்கிழமை (11) திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago