Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 15 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாகக்கூறி, வடமராட்சியைச் சேர்ந்த ஒருவரின் 8.3 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அளுத்கமயைச் சேர்ந்த சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், மதுபான நிலைய அனுமதி பெற்றுத்தருவதாகக்கூறி, வடமராட்சியில் வசிப்பவரிடம் நேரடியாக 6.5 மில்லியன் ரூபாயும் வங்கியூடாக 1.8 மில்லியன் ரூபாயும் பெற்று அனுமதியைப் பெற்றுக்கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார். சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
31 minute ago
36 minute ago