2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

24 வைத்தியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட 88 வைத்தியருக்கான இடமாற்றத்தில் 24 வைத்தியர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 வைத்தியர்கள் இடமாற்றங்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த 88 வைத்தியர்களுக்கே சுகாதார அமைச்சினால் மேற்படி இடமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 24 வைத்தியர்கள் நாவலப்பிட்டி, கிளிநொச்சி, கொழும்பு மற்றும்; யாழ்ப்பாணத்திலுள்ள வேறு பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக இரண்டு வைத்தியர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளதாகவும், அதில் ஒருவர் சத்திரசிகிச்சைப் பிரிவிலும்;, மற்றொருவர் பொது வைத்திய பிரிவிலும் கடமையாற்றி வருகின்றனர்.

அத்துடன், இன்னும் 20 பேருக்கான இடமாற்ற கடிதங்கள் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட பின்னர், குறித்த வைத்தியர்களுக்கான இடமாற்றம் இடம்பெறுமென்றும் யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .