Niroshini / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம, நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (19) அதிகாலை, யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,குறித்த 43 இந்திய மீனவர்களும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .