Niroshini / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ் தில்லைநாதன்
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், டெங்கில் இருந்து எம்மை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில், அச்சுவேலி பொலிஸார், நேற்று (24), அச்சுவேலி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில், சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக, டெங்கு நுளம்பு பரவக்கூடிய ஏதுவான சூழல் இனங்காணப்பட்டு, அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு இருந்தனர்.
அச்சுவேலி - வல்லை வீதி, இராச வீதி, அச்சுவேலி நகரப் பகுதிகளில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் அச்சுவேலி - வல்லைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
53 minute ago
1 hours ago