2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அதிகாரியின் தாக்குதலில் கைதி காயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சிறைச்சாலை அதிகாரியொருவர் தாக்கியதில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

ஜோசப் லியோடான்சன்லோ என்ற கைதியே, காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்குத் தவணையொன்றுக்கு அழைத்து வரப்பட்ட கைதியினை, மீண்டும் வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, வாகனத்தில் வைத்து சிறைச்சாலை அதிகாரி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேற்படி மறியல் கைதி, நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணொருவரை பகடி செய்ததாகவும், இதனை அவதானித்தே, அதிகாரி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .