Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் அனைத்துத் தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரச திணைக்களங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன், நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற அனர்த்த பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,'அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மக்களை பாதுகாப்பது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் சகல தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் ஆகியோர் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
அனர்த்தத்தின் போது பாதிக்கப்படும் மக்களுக்கான சுகாதாரம், குடிநீர் வசதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்ட போது, அந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு பிரதேச செயலகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனர்த்தங்களால் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தால், அவர்களில் உள்ள பெண்கள், சிறுவர் உரிமை தொடர்பில் அக்கறை செலுத்தவேண்டும். கடந்த காலங்களில் அனர்த்தங்களின் போது, விடப்பட்ட பாதுகாப்பு தவறுகள் திருத்தப்பட்டு சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். உயிரிழப்புக்களை தடுப்பதற்கு முழுமுச்சாகச் செயற்படவேண்டும்'என்றார்.
40 minute ago
27 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
27 Jul 2025