Freelancer / 2021 நவம்பர் 20 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.
பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.
இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. R
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago