Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு காற்று வீசுகின்றது எனத் தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.
சிங்கள மக்களே அந்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முயற்சிக்கும் போது, நாங்கள் தற்போது அவசரப் பட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு காற்று வீசுகின்றது எனவும் எனினும், எதிரணயினர் ஆகிய தாம் பொறுத்திருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் கூறினார்.
அதாவது, இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த சிங்கள மக்களே, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தாங்கள் உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
"ஆனால், ஒரு கேள்வி எழுகின்றது; நீங்கள் எதிர்க்கட்சிகள், ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று. அதற்கு, நாங்கள் கூறும் பதில், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை, சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 'நீங்கள் காணும். வீட்டுக்குப் செல்லுங்கள்' என்று சிங்களவர்கள் கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது.
"எனவே, சிங்கள மக்களே அந்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முயற்சிக்கும் போது, நாங்கள் தற்போது அவசரப் பட வேண்டிய தேவை இல்லை" என்றார்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago