Niroshini / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்ட போது, இந்திய மீனவர்களின் படகை கடற்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது , இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் படகை தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் ரோந்து கப்பல் முட்டியதில், இந்திய மீனவரின் படகு சேதமடைந்துள்ளது. இதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள், தமிழ்நாடு - புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
8 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
55 minute ago
1 hours ago