Editorial / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களை 5 வருடங்கள் ஒத்திவைத்த இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
1ஆம் திகதி ஒரு விசைப்படகுடன் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், குறித்த மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் நேற்று (9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
33 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago