Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல், நாளை (12) காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுத் திடல் தொடர்பில் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (10) மாலை நடைபெற்றது.
இதன்போது, திறப்பு விழா பற்றிய விடயங்களும் மைதானத்தில் உள்ள விசேட அம்சங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
இலத்திரனியல் ஸ்கோர்போட், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், பயிற்சிகளுக்கான இடம், மைதான பராமரிப்பு போன்ற வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் செலவில், இந்த நவீன விளையாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுத்திடலானது, வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மைதானத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மோதும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 30 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
30 Aug 2025
30 Aug 2025