Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகிய இரும்பக உரிமையாளர் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், நேற்று, இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
செப்டெம்பர் 6ஆம் திகதியன்று, கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகிய இரும்பக உரிமையாளர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காத கோப்பாய் பொலிஸார், குறித்த நபர் உயிரிழந்தவுடன், தடவியல் பொலிஸாரைக் கொண்டு நேற்று சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதையத்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையை போதனா வைத்தியசாலைக்குச் சென்று முன்னெடுத்தார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .