Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.தயா
தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சுவிஸ் வாழ் புலம்பெயர்ந்த உறவுகளின் அனுசரணையில் நெல்லியடி மைக்கல் நேசக்கரமும் மைக்கல் விளையாட்டு கழகமும் இணைந்து வறுமைக் கோட்டுக்கும் மாற்று வலுவுடையொருக்குமான உதவி வழங்கும் நிகழ்வு.
நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மண்டபத்தில் மைக்கல் நேசக்கரம் அமைப்பின் தலைவர் ச.வேணுகானந்தன் தலைமையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்துக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
இதில் ஈகைச் சுடர்களை நெல்லியடி நேசக்கரங்கள் செயற்பாட்டாளர் ஞானவடிவேல் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் ப.ஜெயமோகன் நேசக்கரங்கள் தலைவர் ரீ.வேணுகாந்தன் ஆகியோர் ஏற்றினர் தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலித்தப்பட்டன.
அதனை தொடர்ந்து மாற்றித் திறனாளியான ஓமந்தை வவுனியாவை சேர்ந்த மகேந்திரராசா பிரதாப் அவர்களுக்கு முச்சக்கர தானியங்கி இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்ய ரூபா 7,5000உம் மணியங்குளம் ஸ்கந்தபுரத்தை சேர்ந்த கோகுலராசா கானகனுக்கு ஈருருளி ஒன்றும் அல்வாய் கிழக்கை சேர்ந்த ஒருவருக்கு ரூபா 5,000உம் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் மைக்கல் விளையாட்டு கழக உறுப்பினர் நேசக்கரம் அமைப்பு உறுப்பினர்கள் பயனாளிகள் என் பலரும் கலந்துகொண்டனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago