2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரத்தை உடைத்த நால்வர் கைது

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பத்தமேனி, வெள்ளவாய்கால் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, முறைப்பாட்டுகாரர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தினை அடித்துடைத்த சந்தேக நபர்கள் நால்வரை, அச்சுவேலி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

கடந்த சிவாரத்திரி தினத்தன்று, உறவினர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து, இரு தரப்பினரையும் கைது செய்த பொலிஸார்,  இணக்கசபை மூலம் பிரச்சிகை்குத் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி விடுவித்தனர்.

தொடர்ந்து, அன்றைய தினம் இரவு, முறைப்பாட்டுக்காரர் வீட்டில், நண்பர் ஒருவர் உழவு இயந்திரத்தினை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நால்வர், மோதல் சம்பவத்தின் பின்னனியினை அடிப்படையாக வைத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தினை அடித்துடைத்து பொருட் சேதம் விளைவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபர்களை கைதுசெய்து மல்லாகம் நீதிமன்றில் நே்றைய தினம் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X