Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடமாகாணத்தில், சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கான ஊக்குவிப்பு பணம் , செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியின் பின்னர் வழங்கப்படவுள்ளதாக, வடக்கு மாகாண விவசாய திணைக்களப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மாவட்ட மட்ட விவசாய குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களில், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கூட்டெருவை தயாரித்து, அதனை விவசாய நிலங்களுக்கு போடும் போது, அவர்களது உற்பத்தி மட்டத்தை அதிகரித்து பராமரிக்க கூடியதாக இருக்கும் என்றார்.
அவ்வாறு செயற்படும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேயருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் அளவில் ஒரு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், அது சம்பந்தமான தரவுகள், கமநல சேவைத் திணைக்களத்தால் சேகரிக்கப்படுகின்றன எனவும் கூறினார்.
செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நடவடிக்கைகள் பூர்த்தியாகுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர், அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன எனவும் கூறினார்.
குறிப்பாக, கமநல சேவைகள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்துக்கு, வடக்கு மாகாண விவசாய திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது சிவகுமார் தெரிவித்தார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025