2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஏ.ரி.எம் அட்டையில் பணமெடுத்தவர் கைது

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.நகரில் உள்ள வங்கி கிளையில் குறித்த சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்று உள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டு உள்ளார். அதில் அட்டையின் ரகசிய குறியீட்டையும் எழுதி வைத்துள்ளார். அட்டையை தவற விட்டமை தொடர்பில் உடனடியாக வங்கிக்கு அறிவித்து உள்ளார்.

அந்நிலையில் தொலைந்ததாக அறிவிக்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஒருவர் பணத்தினை மீள பெற முயற்சிக்கையில் வங்கி ஊழியர்கள் சுதாகரித்து பணத்தினை மீளப் பெற முயன்ற நபரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X