2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கூட்டு வன்புணர்வு: இருவருக்கு 10 வருடங்கள் சிறை

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், சொர்ணகுமார் சொரூபன்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில் காதலனுடன் சென்ற யுவதியினை கடத்திச் கூட்டு வன்புணர்வு புரிந்ததாக கூறப்படும், சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று  தீர்ப்பளித்தார்.

அத்துடன், அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின் 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும். இதேவேளை, பாதிக்கப்பட்ட யுவதிக்கு, இழப்பீடாக 10இலட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறின், மேலும் 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டு, தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரிக்கு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X