2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காணி விடுவிப்பது ஒரு நாளில் நடைபெறும் காரியம் இல்லை

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் நிதர்ஸன்

யாழ் மாவட்டத்தில், பொலிஸாரின் வசமுள்ள காணிகளை ஒரு நாளில் விடுவிப்பது என்பது நடைபெறும் காரியம் இல்லையென, யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம், நேற்று (4) மாவட்டச் செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட பகுதிகலான காங்கேசன்துறை போன்ற பகுதிகளிலுள்ள, பொது மக்களின் வீடுகளை பொலிஸார் இன்னும் தன்வசம் வைத்துள்ளதாகவும் அசோகா கொட்டேல் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென  அக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரதி பொலிஸ் அதிபர்,

குறித்த அப்பகுதிகளை உரிமையாளரிடம் கையளிக்கப்படும். ​இப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையக்காணிகள் இராணுவம் மற்றும் கடற்படையினர் வசம் உள்ளமையினால் அதற்கு மாற்றீடாக கடற்கரையை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் விடுதி அமைக்க காணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் 5 மாடிக் கட்டிடத்தினை அமைக்க முடியாது. ஆதலால் அதற்கேற்றவாறு உரிய காணியினை வழங்க வேண்டும் இல்லையேன், பொலிஸ் நிலையத்திற்கு உரித்தான காணி விடுவிக்கப்பட வேண்டும். அதுவரையும் காங்கேசன் துறையில் இருந்து பொலிஸார் விலகிச் செல்வது சாத்தியமற்றது என  பிரதிப் பொலிஸ் அதிபர் சஞ்சீவ தர்மரட்ண இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .