2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காதலை காரணம் காட்டி முறைப்பாடுகளை ஏற்க மறுப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

காதலைக் காரணம் காட்டி, காணாமல் போகும் சிறுமிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பதற்குப் பொலிஸார் மறுக்கின்றனர் என்று, மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.கௌதமன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம், யாழ். மாவட்டச் செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில், நேற்று (04) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, வடமாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கசர் சனிஸ்ரஸ், காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் முன்னிலையிலேயே, அவர், இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “16 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவருடைய பெற்றோரினால் அண்மையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

“இதேபோன்ற முறைப்பாடு ஒன்றும், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவர் காதல் தொடர்பினால் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளனர். இவ்வாறு கூறிய பொலிஸார், முறைப்பாட்டினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் பெற்றோர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

“காணாமல் போன பிள்ளை, உயிருடன் இருக்கின்றதா என்று கூட தெரியாத நிலையில் பெற்றோர்கள், எவ்வாறு முறைப்பாட்டினை மீள பெற முடியும்? இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .