Niroshini / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை மீன்பிடி படகொன்று, குருநகர் பகுதி மீனவப் படகை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (05) நள்ளிரவு 12 மணியளவில், குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக படகொன்றில் வந்த மூவர், இன்று அதிகாலை 3 மணியளவில், இலங்கை - கக்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் ஒன்று, இலங்கை மீன்பிடி படகை நேராக மோதி, படகை சேதப்படுத்தியதோடு, அந்த இந்திய மீன்பிடி ரோலர் படகில் இருந்தவர்கள் இலங்கை மீன்பிடி படகில் இருந்தவர்களை தாக்கி, கடலில் தூக்கிப் போடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.
18 minute ago
23 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
57 minute ago
1 hours ago