Freelancer / 2024 ஜனவரி 12 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 19 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மறைமுகமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தனக்கு கசிப்பினை உற்பத்தி விநியோகிப்பவர்கள் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் வாங்கியே தான் விற்பனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் தகவலுக்கு அமைய கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது, வீட்டில் இருந்து 19 லீட்டர் கசிப்பினை மீட்டதுடன், வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
6 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
05 Nov 2025