Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வேலணை - துறையூர் பகுதியில், நேற்று (18) மாலை, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான மீனவர் ஒருவர்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி - வெட்டுகாடு, கோவிலடி, வத்தியார் பகுதியைச் சேர்ந்த சுப்பையா வசந்தன் (வயது 26) என்ற இளைஞனே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கடற்படையினர் தங்களைத் தாக்க வருவதை உணர்ந்துகொண்ட ஏனைய 2 மீனவர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த 3 மீனவர்களும், பூநகரி பகுதியில் இருந்து வேலணை பகுதிக்கு படகு மூலம் வந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் வந்த படகை மறித்து சோதனையிட்ட கடற்படை புலனாய்வுப பிரிவினர், 'நீங்கள் கஞ்சா கடத்தவா வந்துள்ளீர்கள்' எனக் கூறி, மீனவர்களை கடுமையாகத்; தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago