2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கண்டாவளை-பன்றி சுட்டான் வீதி புனரமைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கண்டாவளையிலிருந்து பன்றி சுட்டான் வரை செல்லும் 3.7 கிலோமீற்றர் மொத்த வீதியில், 680 மீற்றர் வீதியை ரூபாய் 4 மில்லியன் செலவில் தார்வீதியாக்கும் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வீதியின் பணிகளை, வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ,; கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களம் நடைமுறைப்படுத்தும் வேளையில், வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன ;ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுக்கு கண்டாவளை மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.வ.ஜெகானந்தனும் கிராம அலுவலர் மற்றும் பாடசாலை பழையமாணவர் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .