2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

Editorial   / 2021 நவம்பர் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அந்த முதியவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் வரை தேடி வந்துள்ளனர். காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர். 

அந்நிலையில், இன்றைய தினம் உயரப்புலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் இருந்து முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .