Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி, கலைமதி கிந்துப்பிட்டி மயானத்தில், சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், அங்கு சடலங்களை எரியூட்டுமாறு, மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று (05) உத்தரவிட்டார்.
அத்துடன், இந்து மயானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கு அமைக்கப்படும் மதில்களை உடைத்து, அடாவடியில் ஈடுபடும் தரப்பை எச்சரித்த நீதவான், எல்லை மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, அச்சுவேலி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், நேற்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், மதில் அமைக்கப்பட்டப் பின்னர், அது தொடர்பில், டிசெம்பர் 18ஆம் திகதியன்று, மன்றில் அறிவித்தலை வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதவான், வழக்கை 18ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
15 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago