Freelancer / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
கோப்பாயில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதோடு, சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு காணப்படுகிறது.
இதனை தடுக்கும் முகமாக இன்று காலை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கோப்பாய் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் அத்தியாவசிய சேவை தவிர்ந்து வீதியில் பயணித்தோர் மற்றும் பயணத்தடை வேளையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது வீதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டோரின் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .