Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாண சபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்ய வேண்டிய பலதைச் செய்யாமல் தவறிழைத்துள்ளது. அதனால் சபையின் ஐந்தாண்டு காலத்தில் சபை தோல்வி அடைந்திருப்பதாக, சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மாகாண சபையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, தவராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டுகளும் நிறைவடைய இருக்கின்றது. இந்நிலையில் மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பேசப்படுகின்றது. அதில் அரசியல் சம்பந்தமான விடயங்கள் குறித்தான நகர்வில் பலதை மாகாண சபை செய்துள்ளது. ஆனால் மாகாண சபையின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் அவ்வாறில்லை.
“குறிப்பாக, அரசியல் சம்பந்தமான அந்த நகர்வு மட்டும் சபைக்கு போதாது. அவ்வாறு அரசியல் ரீதியான நகர்வுகளில் எங்களின் ஆதங்கங்களை வெளிக்காட்டும் வழிமுறையில் தான் பலதைச் செய்திருக்கின்றோம். ஆனால், மாகாண சபையினுடைய விடயப்பரப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைத் தான் மாகாண சபை செய்ய வேண்டியது.
“ஆகையால், அத்தகைய செயற்பாடகளை செய்யாததால் மாகாண சபை அதில் தோற்றிருக்கின்றதென்றே கூறலாம். அதிலும் செய்யவேண்டியது எத்தனையோ விடயங்களை செய்யவும் இல்லை. அவற்றை நடைமுறைப்படுத்தவும் இல்லை.
“அது மட்டுமல்ல, நாங்கள் அதிலே எத்தனையே தவறுகளை விட்டிருக்கின்றோம், சந்தர்ப்பங்கைள இழந்ந்திருக்கின்றோம், வினைத்திறனற்ற செயற்பாடுகளை செய்திருக்கின்றோம். எத்தனையோ அதிகார வரம்பு மீறிய செயற்பாடுகளைக் கூட செய்திருக்கின்றோம்.
“இதெல்லாம் எங்களுடைய மாகாண சபை விடயங்களில் எங்களுக்கு சரியான தெளிவற்ற தன்மை. எங்களுக்கு இதனை எவ்வாறு நடாத்த வேண்டும். எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். அதிகார வரம்பு என்ன என்பதை சரியான ஒரு தெளிவில்லாத சூழலில் தான் நாங்கள் இந்த மாகாண சபையை நடத்தியிருக்கின்றோம்.
“இதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை நான் தனியே குற்றஞ்சாட்டுவதாக கருதக் கூடாது. முதலமைச்சரின் அரசியல் செயற்பாடுகளுக்கு நான் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றேன். அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிக்கு வரைபுகள் தயாரிப்பதிலும் அதனை அவர் சார்பாக அரசியல் நிர்ணய சபைக்கு எடுத்தியம்பியிருக்கின்றேன்.
“அவருடன் சேர்ந்து மாகாண சபை முடிவுகளை கூட சபாநாயகரிடம் கொடுப்பதற்கும் சென்றிருக்கின்றேன். இதற்கு நான் சார்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினுடைய எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. அத்தோடு அவ்வாறான செயற்பாடுகளுக்கு முழு ஆதரவை வழங்காத நிலையிலும் கூட நான் அதனைச் செய்திருக்கின்றேன்.
ஆனால், மாகாண சபையினுடைய நிர்வாக விடயங்களில் முழுக்க முழுக்க அவருடைய செயற்பாடுகளை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், அவர் தான் தலை. அவர் சரியாக இருந்தால் தான் மற்றதெல்லாம் சரியாக நடக்கும். முழு அதிகாரம் உடையவர் அவர் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதில் அவர் தான் பொறுப்பெடுக்க வேண்டும்.
“உண்மையில் அவர் தன்னுடைய நிர்வாகச் செயற்பாடுகளில் சரியாக நடக்கவில்லை. அவர் எல்லாவற்றையம் அரசியல் மயப்படுத்திய விடயமாகத் தான் கையான்டிருக்கின்றார். அவ்வாறே பார்த்தாரே தவிர விடயங்களைப் பார்க்கவில்லை. அதனால் பலதைச் செய்யாமல் தவறுவிட்டிருக்கின்றோம். அவ்வாறு அவர் அதனைச் செய்யாதால் வினைத்திறனற்ற நிலைமை ஏற்பட்டது” என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .