Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அண்மையில் வீட்டுத் தேவைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்க சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு வியாழக்கிழமை (02) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago