Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் பகுதியில், வியாபாரத்தில் ஈடுபடும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் வருடாந்த பொருந்திருவிழா, இன்று (08) ஆரம்பமான நிலையில், கோவில் சூழலில் வியாபாரத்தில் ஈடுபடும் கச்சான் வியாபாரிகள் உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதே, இரண்டு பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் சூழலில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், திருவிழாவுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையிலேயே, நேற்று (07), 36 பேரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்;படுத்தப்பட்டன.
இதேவேளை, கோவிலுடன் தொடர்புடைய 75 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 25 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
47 minute ago
57 minute ago