Niroshini / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக முன்றலில், செவ்வாய்க்கிழமை (02) மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவும் அரசாங்கத்தால் உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதில் இடர்பாடு காணப்படுவதனால், விவசாயிகள் கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரும் இடரை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவும் கூறினார்.
இந்நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி, நாளை செவ்வாய்க்கிழமை, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
‘வலிகாமம் வடக்கு பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமேபயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிதி வசதிகள் இன்று வரை மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்துடன், யாழ். மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கவுள்ளனர்' எனவும், அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025