Janu / 2024 ஜூன் 02 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன் , பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ள சம்பவம் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது .
சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .
யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன் , பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர் .
திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட போது , இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
அதனை அவதானித்த அயலவர்கள் ஓடி சென்று தீயினை அனைத்து , பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர் .
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்


11 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
2 hours ago