Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 26 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீதியில் இன்று (26) வௌ்ளிக்கிழமை டயர் கொளுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், டயரை கொளுத்திய இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். எரிந்துகொண்டிருந்த டயரையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்விருவரையும் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையிலும் , இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் என்பதனாலும் , வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புகள் , கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் குருநகரில் வீதியில் டயர் கொளுத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Aug 2025