Editorial / 2021 நவம்பர் 19 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி மாணவர்களால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.
நேற்று (18) மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர்.
கடந்த வருடம் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


14 minute ago
28 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
43 minute ago
1 hours ago