2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்7 ஆவது வருடாந்த மாநாடு

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது வருடாந்த மாநாடு, யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைகோரி தொடர்ந்து போராடுவோம், இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும், யுத்தத்தின் பின்னரும் தொடரும் கட்டமைப்புசார்  இன அழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும், உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X