Freelancer / 2023 மார்ச் 19 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கான காரணங்கள் எவையும் குறிப்பிடப்படாது, நேற்று (18) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில்,
வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24ஆம் திகதி, மு.ப 09 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும் தவிசாளர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 09 உறுப்பினர்கள் TID யினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளராக இருந்து சமூகநலப் பணிகளிலும், அரசியற் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் வீரவாகு விஜயகுமாரவும் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)
4 minute ago
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
13 minute ago