Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டுமென, நல்லை அதீனக் குரு முதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமசாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன், இளைஞரிணிச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஆகியோர், நேற்று முன்தினம் (28), நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் விடயத்தில், எல்லோரும் குறிப்பாக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக ஒத்த கருத்துடன் ஒன்றுபட வேண்டுமென்றும் அத்தகைய ஒற்றுமை குறித்து தானும் சிலருடன் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த ஒற்றுமைக்காக தொடர்ந்தும் பலருடனும் பேச இருப்பதாகத் தெரிவித்த அவர், இன்றைய காலத்தில் தமிழ்த் தரப்புக்கள் பிரிந்து நிற்காமல், ஒன்றாக ஒருமித்து பயணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் அபிவிருத்தி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு அவ்வாறான ஒற்றுமை வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் அதற்காக தாமும் தம்மாலான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், டெலோ அமைப்பின் பிரதிநிதிகள், குரு முதல்வரிடம் தெரிவித்தனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago