Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்த முறை, வாக்கு எண்ணும் பணிகள் மறுநாள் காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இடைநேரத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் செலுத்தப்பட்ட வாக்குகள் என்பவற்றின் பாதுகாப்பை எமது வாக்களிப்பு முகவர்கள் மற்றும் வாக்கெண்ணும் முகவர்கள் மிகக் கவனமாக உற்று நோக்கி, ஏதாவது தவறுகள் காணப்பட்டால் அது பற்றி உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மானிப்பாய், பட்டினச்சபையில், நேற்று (28) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அண்மைக் காலமாக சுமந்திரனின் அறிக்கைகளும் பத்திரிகைச் செய்திகளும் தமக்கு அதிர்ச்சி தருவனவாக உள்ளனவெனவும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே அவரது அறிக்கைகள் வெளிவருகின்றனவெனவும் கூறினார்.
“அவர் மிகவும் தெட்டத்தெளிவாக, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார். ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது.
“இவற்றின் அடிப்படையில் எந்தளவுக்கு இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்தும் வகையில் இவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள மற்றையோரும் செயற்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது” எனவும், விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“பொருளாதார அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கூற்றில் முரண்பாடு இருக்கின்றது. முன்னர் இந்தக் கூட்டமைப்பினர் தான் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாக டக்ளஸை வசைபாடினர். இப்போது டக்ளஸின் மீது மதிப்பு வந்துவிட்டதா அல்லது அபிவிருத்தி மீது அபிமானம் பிறந்து விட்டதா?” எனவும், அவர் வினவினார்.
உண்மையிலேயே இவர்களுக்கு அபிவிருத்தி மீது அக்கறை இருந்திருக்குமாயின் வடமாகாணசபைக்கு ஒத்துழைப்பை வழங்கி முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு உதவியிருக்க முடியுமெனத் தெரிவித்த அவர், ஆனால் எந்தவிதத்திலும் தமக்கு உதவாதது மட்டுமன்றி, மறைமுகமாக எதிர்ப்புகளையே காட்டி வந்தனரெனவும் சாடினார்.
“எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மை முகம் அண்மைக்காலமாக தெரியத் தொடங்கியிருக்கின்றது. தம்மை வளப்படுத்துவதற்கும், சொத்துக் குவிப்பதற்கும், மாட மாளிகை, சொகுசு கார் என அவர்கள் சிந்தனைகள் ஆகாயத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு மக்கள் மீதோ அல்லது அவர்களின் அபிலாiஷகள் பற்றியோ எந்தவித கரிசனையும் இல்லை.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகளஜன் மீதோ எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் தான் என்னைப் பார்த்து அஞ்சுகின்றார்கள் போலத் தெரிகின்றது. அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு பிழையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள். நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறுகின்றார்கள். நிதி நிர்வாகத்தில் இலங்கையிலேயே முதற்பரிசைப் பெற்ற எம்மை நிர்வாகம் தெரியாதவர்கள் என்கின்றார்கள். பொய்களை மூட்டைகட்டி வந்து தமது கூட்டங்களில் அவிழ்த்து விடுகின்றார்கள்” எனவும், அவர் தெரிவித்தார்.
“நான் வாராந்தம் பத்திரிகைகளில் வழங்கி வருகின்ற கேள்வி பதில்கள் மக்களுக்கு ஒரு தெளிவூட்டலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைக் கலைக்கும் முகமாக, தேர்தலுக்கு முதல் நாள் என்மீது கூடுதல் அக்கறை கொண்ட சில பத்திரிகையாளர்கள் இணைந்து என்மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகின்றார்கள் என அறிந்தேன். உண்மையில் கேள்வி கேட்க விரும்புபவர்கள் அல்லது அரசியல் தெளிவை தமது பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்த விரும்புபவர்கள், அவர்களின் கேள்விகளை, நான் பதிலளிக்கக்கூடிய வகையில் தேர்தலுக்கு முற்கூட்டியே தொடுத்திருக்க வேண்டும்.
“அதைவிடுத்து தேர்தலுக்கு முன்னர் பதில் கூற முடியாத விதமாகப் பொய்யான அடிப்படையிலான கேள்விக் கணைகளைத் தொடுக்க இருப்பது கோளைத்தனத்தையும் அவர்களின் பயத்தையுமே பிரதிபலிக்கின்றன” எனவும், அவர் தெரிவித்தார்.
நான் போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசியற் தீர்வு பெற்றுத் தருவேன், அரச வேலை பெற்றுத் தருவேன் என்று ஏமாற்றுபவன் அல்லவெனவும் ஆனால் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமெனவும், சி.வி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago
8 hours ago