Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
கனமழையின் தாக்கத்தால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது என்றார்.
எனவே, பொதுமக்கள், சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து, சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறும், பணிப்பாளர் அறிவித்துள்ளார்
எனினும், போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் எனினும் சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
12 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago