Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தாழமுக்கத்தால், யாழில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதென, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில், இன்று (23) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், திங்கட்கிழமை (23) தொடக்கம் 24, 25ஆம் திகதி வரை மீனவர்களை கடலுக்கு அவதானமாகச் செல்லுமாறும் அதே நேரத்தில் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறகூடிய நிலை காணப்படுவதால், அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதென்றார்.
'அதன்படி 24, 25ஆம் திகதிகளில், வடக்கு மாகாணத்தில், 100-150 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும், கடும் காற்று வீசும் என, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும், கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக, பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படகுப் போக்குவரத்தை நிலைமையை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்' எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால், வட பகுதிக்கு ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கு பாரிய ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அவர் கூறினார்.
எனினும், தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது இடர்பாடுகளை அர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்தமுகாமைத்துவ பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்பொழுது மழை பெய்ய தொடங்கியுள்ளதன் காரணமாக, டெங்கு அபாயம் சற்று அதிகரித்து காணப்படுகின்றதெனவும், அவர் தெரிவித்தார்.
27 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
3 hours ago