எம். றொசாந்த் / 2018 நவம்பர் 07 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில். தீபாவளி தினத்தன்று ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியை அறுத்துக்கொண்டு வேகமாகத் தப்பியோடியுள்ளனர்.
அது தொடர்பில் தாலிக்கொடியை பறிகொடுத்தவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை திருநெல்வேலி சிவன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதவேளை கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிப்பாட்டுக்குச் சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி விட்டு 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அது குறித்தும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
20 Dec 2025
20 Dec 2025