Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 04 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.
"ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். விகாரையின் முகப்பிலோ, பாதையிலேயோ தடைகளை ஏற்படுத்த கூடாது. விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ , இடையூறு ஏற்படுத்த கூடாது" என நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
அதேவேளை திறந்தவர்களது உரித்து ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பின் , உரிய நீதிமன்றில் உரிய வழக்கொன்றை தாக்கல் செய்து , உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியம் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு உள்ளது.R
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago