Editorial / 2019 மே 13 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
யாழ்ப்பாணத்தில், கடந்த நில தினங்களாக இடம்பெற்ற தொடர் கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேரை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார், இன்று (13) தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.
நேற்று (12) மாலை பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்து நால்வரைக் கைதுசெய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சந்தேகநபர்களுக்கு எதிராக, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் 21 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருபப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago